நாகை மாவட்டம் இடையாத்தங்குடி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக கட்டிடத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா.