பொள்ளாச்சி நேதாஜி ரோடு தங்கமுத்து காலனியில் சாலையோரத்தில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுபோன்று தண்ணீர் வீணாவது வேதனை அளிக்கிறது. எனவே தண்ணீர் வீணாமல் தடுக்க குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.