மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் கீழ்செவளாம்பாடி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகி்ன்றனர். இங்கு போதிய அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.