விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தார் ரோட்டிற்கு அடியில் செல்லும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசிந்து வெளியேறி குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.