திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், டி.கல்விக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீத்தேக்க தொட்டியை சுத்தம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. தற்போது வரை சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வரும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.