குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-04-09 10:25 GMT

திருவாரூர் மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் பகுதி கடை தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதன்காரணமாக அந்த குழாய் மூலம் குடிநீர் பெறுபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையோரத்திலும் குடிநீர் தேங்கி நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்