விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டை அருகே சிறுவம்பாரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டி பலவீனம் அடைந்து காணப்படுவதால், எந்நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து விட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.