சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் ஊராட்சியில் ஊராங்காணி சாலை, செட்டியார் தெரு, பிள்ளையார் கோவில் போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மினி குடிநீர் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?