வீணாகும் குடிநீர்

Update: 2023-03-29 16:20 GMT

மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் தோப்பூர் அடுத்த மோளக்கவுண்டனூர் பிரிவு அருகே சாலை ஓரத்தில் குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி அந்த பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளது. கோடைகாலத்தில் வீணாகும் குடிநீரால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இதனால் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஸ், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்