மரக்காணம் தாலுகா வேப்பேரி கிராமம் சின்னஏரி மதகு அருகே சாலையோரத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால், அதை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும் குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல், அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே குழாய் உடைப்பை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.