பழனியில் புதுதாராபுரம் சாலையோரம் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே வெயிலின் தாக்கத்தால் குளம், குட்டை, அணைகளில் தண்ணீர் வற்ற தொடங்கியுள்ளது. இதற்கிடையே அதிகாரிகளின் மெத்தனத்தால் இதுபோன்று குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.