காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-03-08 18:27 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம் கிராமத்தில் உள்ள மினி குடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்