தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு 13-வது வார்டு மந்திரிகவுண்டர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குபேரன், மந்திரிகவுண்டர், தர்மபுரி.