பழனி சத்யாநகரில் தனியார் ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. சாலையில் குடிநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே குடிநீர் வீணாக செல்லாமல் தடுப்பதற்கு குழாயை சரிசெய்ய வேண்டும்.