திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் துலங்கம்பட்டு கிராமம் அங்கன்வாடி மையம் அருகில் மினி குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் நல்லி இல்லாததால் குடிநீர் எந்நேரமும் வெளியாகி வீணாகி வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. எனவே தொட்டியில் நல்லி அமைத்து குடிநீர் விரையமாவதை தடுக்க வேண்டும்.