வீணாகும் தண்ணீர்

Update: 2022-07-20 11:14 GMT

நாமக்கல் குளக்கரை திடல் அருகே உள்ள பிரதான சாலையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஒன்று உள்ளது. அந்த பள்ளத்தில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் நிரம்பியதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் தினந்தோறும் அந்த குழாயில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறுகிறது. அவை அனைத்தும் வீணாக சாலையில் ஓடுகிறது. அதை தடுக்க உடைந்த தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.

-செல்வன், குளக்கரை, நாமக்கல்.

மேலும் செய்திகள்