தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு மாணவர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தண்ணீர் வருவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் செய்யாமல் வினோத முறையில் குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல்அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-ராமர், ஏரியூர், தர்மபுரி.