விழப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் வெள்ளையாம்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த குடிநீர் தொட்டி பலத்த சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த தொட்டி உள்ளதால், கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் நிகழும் முன் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.