காட்சி பொருளான குடிநீர்தொட்டி

Update: 2022-07-19 12:25 GMT
தஞ்சையை அடுத்துள்ள‌ வல்லம் பேரூராட்சி 7-வது வார்டு கீழமுஸ்லிம் தெருவில் பேரூராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வந்தது. இதன் மூலம் அந்த பகுதி மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக குடிநீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. குடிநீர் கிடைக்காமல் அந்த பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்