நாமக்கல் மாவட்டம் வலையபட்டி அருகே அரூர் புதூரில் உயர்மட்ட குடிநீர் தொட்டி சேதமான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த தொட்டியில் இருந்துதான் தற்போது வரை தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த குடிநீர் தொட்டியில் கான்கிரீட் உடைந்து இரும்பு கம்பிகள் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. பொிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும்.
-ராமசாமி, வளையபட்டி, நாமக்கல்.