விழுப்புரம் மாவட்டம் பேரணி கிராமத்தில் பாலம் கட்டும் பணியின் போது குடிநீர் செல்லும் குழாய் உடைந்தது. இதனால் கிராம மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் வெகுதூரம் கால்கடுக்க நடந்து சென்று குடிநீர் பிடித்து வரும் அவலநிலை உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.