விழுப்புரம் தாலுகா சிறுவாக்கூர் அருகே சவரிநாயகன்பேட்டையில் மினிகுடிநீர் தொட்டி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.