புவனகிரி தாலுகா வடதலைக்குளம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி அசுத்தமாக காணப்படுகிறது. இதிலிருந்து வரும் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே குடிநீர் தொட்டியை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.