கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அங்கு குழி தோண்டப்பட்டபோது, குழாய் உடைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த குழியில் குட்டை போல் குடிநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதோடு குழியை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.