கோத்தகிரி மார்க்கெட்டில் கடைகள் மற்றும் உணவகங்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மேற்புறம் கோழிக்கூடைகள் அடுக்கி வைக்கபடுவதால், மழை நேரத்தில் அதிலுள்ள கழிவுகள் தொட்டிக்குள் சென்று குடிநீர் மாசுபட்டு வருகிறது. எனவே தொட்டியின் மேற்புறம் கோழிக்கூடைகளை அடுக்கி வைப்பதை தடுக்க வேண்டும்.