திறப்பு விழா காணாமலேயே சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-12-21 17:40 GMT
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் குடிநீர் தொட்டி சேதமடைந்தும் காணப்படுகிறது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்