திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தில் தனியார் பள்ளிக்கூடத்தின் முன்பு, திண்டுக்கல்-நத்தம் நெடுஞ்சாலையில் குழாய் உடைத்து குடிநீர் வீணாகி வருகிறது. வீணாகும் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர் வீணாவதை பார்த்து பொதுமக்கள் ஆதங்கபடுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?