மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது பாதசாரிகள் மீது தண்ணீர் தெறிக்கிறது. மேலும் சாலையும் சேதமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, குழாய் உடைப்பை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.