சங்கராபுரம் தாலுக்கா பூட்டை கிராமம் ஆதி திராவிடர் நலப் பகுதியில் உள்ள மூப்பனார் கோவிலுக்கு செல்லும் வீதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்குள்ள வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாத காரணத்தால் தண்ணீர் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவதோடு அங்கு உள்ள வடிகால் அனைத்தையும் தூர் வாருவது அவசியம்.