சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே உள்ள மினிகுடிநீர் குழாய் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே சேதமடைந்து கிடக்கும் குடிநீா் குழாயை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.