இடிந்து விழும் நிலையில் குடிநீர்தொட்டி

Update: 2022-12-11 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

-சந்தானம், பொட்டணம், நாமக்கல்.

மேலும் செய்திகள்