நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து எஸ்.வாழவந்தி, கே.புதுப்பாளையம் வழியாக சென்று அங்கிருந்து மோட்டார் மூலம் நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் செல்லும் வழியில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. அதனால் அந்த பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.
-கண்ணப்பன், பாலப்பட்டி, நாமக்கல்.