தண்ணீரின்றி வறண்ட குளம்

Update: 2022-12-11 13:11 GMT
தண்ணீரின்றி வறண்ட குளம்
  • whatsapp icon

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்துக்கு பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் தற்போது வரை பாசன வாய்க்காலில் இருந்து நீர் திறக்கப்படாமல் குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தில் நீர் நிரப்பிட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்