சங்கரன்கோவில் தாலுகா பனையூர் பஞ்சாயத்து வயலிமிட்டா கிராமம் மேல தெருவில் முப்பிடாதி அம்மன் கோவில் அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அதில் தண்ணீர் தேக்க முடியாததால், பல மாதங்களாக பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் அங்குள்ள குளத்துகரையில் தடுப்புசுவர் இல்லாமலும், சாலை குண்டும் குழியுமாகவும் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.