மந்தாரக்குப்பம் அடுத்த ஆதண்டார்கொள்ளை பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த காரணத்தால் எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?