மேம்பாலம் அமைத்து தர வேண்டும்

Update: 2022-11-20 18:16 GMT
கடலூர் தாலுகா மதலப்பட்டு ஊராட்சி கரிக்கன்நகர் கிராமத்தில் மலட்டாற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள், உயிரை கையில் பிடித்தப்படி இந்த பாலத்தை கடந்து தான் சென்று வருகிறது. எனவே விபரீதம் நிகழும் முன் அங்கு மேம்பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்