திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் மூலம் அந்த பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.