குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-11-09 13:30 GMT

ஆனைமலை அருகே குட்டதாம்பாறை வி.ஐ.பி. கார்டன் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாயும் சரி செய்யப்படவில்லை, குழியும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதோடு குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்