விழுப்புரம் நகராட்சி 30-வது வார்டு கம்பன் தெரு பகுதியில் உள்ள படேல் வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்று தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதோடு, அப்பகுதியில் சிமெண்டு சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.