வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-06 13:55 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி விளக்குடி கிராமம் கீழத்தெருவில் பாசன வயாக்கால் முறையான பாராமரிப்பின்றி உள்ளது. இதனால் வாய்க்கால் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், செடி,கொடிகள் வளர்ந்து வாய்க்கால் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக வாய்க்கால் வழியாக விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள பாசன வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்