தஞ்சை மருத்துவகல்லூரி சாலை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வழிந்து தொட்டியின் அருகே குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும்.