விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் வெள்ளையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கட்டிடம் மிகவும் பலவீனமடைந்து இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் பள்ளி கட்டிடத்தின் மேல்தளத்தில் தண்ணீர் தேங்காதவாறு வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?