முக்கூடல் பேரூராட்சி 4-வது வார்டு சடையப்பபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அங்கு சாலையின் நடுவில் இருந்த குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைக்காமல், சுற்றிலும் சாலை அமைத்துள்ளனர். இதனால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.