தர்மபுரி மாவட்டம் பேடரப்பள்ளி கிராமத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக பொதுகுடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் குழாயில் வரும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் வருகிறது. இரும்பு துகள்கள் கலந்து வருவதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி நல்ல குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.