குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-10-30 18:10 GMT
வடலூர் அருகே கருங்குழி ஊராட்சியில் கடைத்தெரு, வடக்குத்தெரு, காளியம்மன் கோவில்தெரு ஆகிய பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வரும் நிலை உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்