குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-10-30 15:44 GMT

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி கிராமம் தேவாரம் நகரில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்