குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-30 15:43 GMT

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம்-பாபநாசம் சாலை சீதாலெட்சுமிபுரம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழாய் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் குழாயில் குடிநீர் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா.



மேலும் செய்திகள்