கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் தான் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் காசு கொடுத்து, தண்ணீரை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.