நாகர்கோவில் பறக்கை பகுதியில் பாத்திமா நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முஹம்மது இப்திகார், பாத்திமாநகர்.