திருத்துறைப்பூண்டியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு திருத்துறைப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் வடிகால் வசதி இல்லாததால் வாசலில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.